மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!

Published On:

| By Kavi

மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் பல இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு உதவ தங்களால் முடிந்த தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.  நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்கள்.

Image

இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராமில் ரூ. 1 லட்ச ரூபாய்க்கான காசோலையின் புகைப்படத்தை பதிவிட்டு “My humble Contribution. கை கோர்ப்போம்” என்ற வாக்கியத்துடன் ஸ்டோரியில் பகிர்ந்து உள்ளார்.

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்… இன்சூரன்ஸ் எளிதாக பெறுவது எப்படி?

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel