மாமன்னன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தலித் வாழ்வியல் பற்றியும் அவர்களுடைய பிரச்சனைகள் குறித்தும் மாரி செல்வராஜ் தனது படைப்புகளின் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படமான மாமன்னன் மூலம் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் முவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படம் மாமன்னன் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்தநிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் தோரணையாக நிற்கும் வடிவேலுவை நேருக்கு நேர் பார்ப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இப்புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
செல்வம்
புல்வாமா தாக்குதல்: மெளனம் கலைப்பாரா மோடி? – காங்கிரஸ் கேள்வி!