lover lal salaam merry christmas ott
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள், மொத்தமாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.
அதன்படி இந்த வாரம் ‘லால் சலாம்’, ‘லவ்வர்’, ‘மேரி கிறிஸ்துமஸ்’, ‘ஹனுமான்’ (தெலுங்கு), ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ (மலையாளம்), ‘யாத்ரா 2’ (தெலுங்கு) ஆகிய படங்கள் வெளியாகின்றன.
அந்தவகையில் மேற்கண்ட படங்கள் வெளியாகின்ற தேதி மற்றும் ஓடிடி தளங்கள் குறித்து நாம் இங்கே காணலாம்.
லால் சலாம்
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியான படம் ‘லால் சலாம்’.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
லவ்வர்
மணிகண்டன், ஸ்ரீகௌரிப்பிரியா நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியான படம் ‘லவ்வர்’. இளைஞர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பினை பெற்ற இப்படம், வருகின்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 8) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மேரி கிறிஸ்துமஸ்
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தினை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இப்படம், வருகின்ற மார்ச் 8-ம் தேதி இப்படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஹனுமான் (தெலுங்கு)
தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ஆகியோரது நடிப்பில் சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகி மாபெரும் வசூலைக்குவித்த படம் ‘ஹனுமான்’. இப்படம் வருகின்ற மார்ச் 8 அன்று ஜீ5 (Zee 5) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
யாத்ரா 2 (தெலுங்கு)
மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து, ஜீவா நடித்திருக்கும் படம் ‘யாத்ரா 2’. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடித்திருக்கும் இப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது.
அன்வேஷிப்பின் கண்டதும் (மலையாளம்)
அறிமுக இயக்குநர் டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டொவினோ தாமஸ், சித்திக், ஷாதிக், பாபுராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ வெளியாகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவின் தேர்தல் பத்திர ரகசியங்கள்..தேர்தலுக்கு முன்பு வெளியிட முடியாது..SBI சொல்வதன் பின்னணி என்ன?