இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “G Squad” தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகும் முதல் படத்திற்கு Fight Club என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் உறியடி விஜய் குமார் ஹீரோவாக நடிக்க, அப்பாஸ் ஏ ரஹ்மான் படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் Fight Club படம் குறித்த ஓர் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு பக்கா மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் Fight Club படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Fight Club படம் இந்த (டிசம்பர்) மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்