Kanguva டீசர் ரெடி… Sizzle இதற்கான அர்த்தம் என்ன?

Published On:

| By Manjula

‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியினை, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா’.

GOLD RATE: ‘ஸ்வீட் ஷாக்’ கொடுத்த தங்கம் விலை

1௦ மொழிகள், மிகப்பெரிய பட்ஜெட் என சூர்யாவின் கேரியரில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படமாக கங்குவா திகழ்கிறது. ரசிகர்கள் இப்படத்தினை திரையரங்குகளில் 3டி முறையில் கண்டு களிக்கலாம்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தினை தயாரித்து உள்ளன. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சுமார் 2 வருடங்கள் கழித்து சூர்யா படம் திரைக்கு வருவதால் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் இப்படத்தினை வெகுவாக எதிர்பார்த்து காத்துள்ளனர். முதல் பாகம் நன்றாக வந்திருப்பதால் இரண்டாவது பாகத்தினையும் எடுக்க படக்குழு திட்டமிட்டு அதற்காக 3 நாட்கள் ஷூட்டிங்கினையும் நடத்தியுள்ளது.

WhatsApp: வரப்போகும் சூப்பர் அப்டேட்… இது நல்லாருக்கே!

இந்தநிலையில் ரசிகர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் நாளை (மார்ச் 19) மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள் இந்த அப்டேட்டினை வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் #Kanguva ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு நடுவில் Sizzle என்னும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் கூகுள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் Sizzle அதிகம் தேடப்படும் வார்த்தையாக உள்ளது. உண்மையில் இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தேடினால், சூடான எண்ணெயில் உணவு வறுபடும்போது எழுப்பப்படும் ஒலி என தெரிய வந்துள்ளது.

இதனால் டீசரும் இதுபோல தீயாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது கருத்தினை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இவை தான்!

மதிமுக வேட்பாளர் துரை வைகோ… தாயகத்தில் இன்று கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share