‘கருடன்’, ‘கல்கி’ அனிமேஷன் சீரிஸ்… இந்த வார தியேட்டர் ஓடிடி லிஸ்ட் இதோ!

Published On:

| By indhu

"Garudan" to "Kalki" series... List of movies releasing this week..!

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியலை பார்ப்போம்.

தியேட்டரில் வெளியாகும் படங்களின் பட்டியல்:

விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள “கருடன்” திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள “ஹிட் லிஸ்ட்” திரைப்படம் வரும் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார், இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் கந்தசாமி இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் உருவாகியுள்ள “புஜ்ஜி at அனுப்பட்டி” என்ற திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் முகமது ஆசிஃப் அமித் இயக்கத்தில் நடிகர்கள் வினோத் கிஷன், நாசர், ஸ்வாயம் சித்தா நடித்துள்ள “The Akaali” என்ற தமிழ் திரைப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் தெலுங்கில் விஷ்வக் சென் நடிப்பில் “கேங்ஸ் ஆப் கோதாவரி”, மலையாளத்தில் அர்ஜுன் அசோகன் நடித்துள்ள “Once upon a Time in Kochi”, ஹிந்தியில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள “Mr. & Mrs. Mahi”, இங்கிலீஷில் “Fast Charlie” & “The Strangers : Chapter 1” ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வரும் மே 31ஆம் தேதி வெளியாகிறது.

ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல்:

ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ள “ஸ்வதந்த்ர வீர சாவர்க்கர்” திரைப்படம் மே 28 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மணி வர்மா இயக்கத்தில் தமன்குமார் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான “ஒரு நொடி” திரைப்படம் மே 31 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மேலும் மே 30 ஆம் தேதி “ரமணா யூத்” என்ற தெலுங்கு திரைப்படம் ETV Win ஓடிடியிலும், “The First Omen” என்ற ஆங்கிலத் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி பிரபலமான ஹிந்தி வெப் சீரிஸ் ஆன “பஞ்சாயத்” சீரிஸின் சீசன் 3 அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் மே 28ஆம் தேதி வெளியாகி உள்ளது.

அதேபோல் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் “Illegal” வெப் சீரிஸ் சீசன் 3 மே 29ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. தமிழில் “உப்பு மிளகாய் காரம்” என்ற வெப் சீரிஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மே 30 வெளியாகி உள்ளது.

நடிகர் பிரபாஸின் “கல்கி” படம் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது அந்த படத்தில் புஜ்ஜி என்ற ஒரு ரோபோட் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு “Bujji and Bhairava” என்ற மினி அனிமேஷன் வெப்சீரிஸ் வரும் மே 31 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி: ஐசியூவாக மாறிய அரசு பேருந்து!

அதர்வாவின் புதிய படம்… மீண்டும் நடிகராக களமிறங்கும் தமன்..?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel