”இலங்கை பிரதமர் சீமான்”: இணையத்தை கலக்கும் ’அடியே’ மோஷன் போஸ்டர்!

Published On:

| By Monisha

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை நடிகர் ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் .

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. ஜி. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு, புதுமுக நடிகர் மதும்கேஷ் , மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் அடியே திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம் குமார் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது, ” தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன் மல்ட்டி வெர்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் காதலை சொல்வதில் ‘அடியே’ திரைப்படம் தான் முதல் படைப்பு.

இத்திரைப்படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதன் இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாகத் தோன்றுவது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும்” என்றார்.

https://twitter.com/gvprakash/status/1651216844098015233?s=20

‘அடியே’ படத்தின் மோஷன் போஸ்டரில்…

இலங்கை பிரதமர் சீமான் மெட்ராஸ் வருகை… ‘யோகன் அத்தியாயம் 1’ 150 நாள் போஸ்டர்.. ‘தல’ அஜித் குமார் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 பந்தயத்தில் ஐந்தாவது முறையாக வென்றிருப்பது…

தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் புது கட்டிட திறப்பு விழா.. விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார்… சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் 3.0…என மல்ட்டி வெர்ஸ் உலக கலாட்டாவை.. புதிய தொழில்நுட்ப பின்னணியுடன் விவரித்திருப்பதும், இதனூடாக நாயகன் ஜீ.வி. பிரகாஷ் குமார் அப்பாவியாகவும், அர்த்தமுள்ள பார்வையுடனும் தோன்றுவது.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இராமானுஜம்

ஜி ஸ்கொயர் நிறுவனம்: 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

சூடான்: தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share