லோகேஷின் “G squad” தயாரிப்பில் முதல் படம்… இயக்குனர் யார் தெரியுமா?

Published On:

| By christopher

லியோ படத்தை தொடர்ந்து அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ( நவம்பர் 27) “G Squad” என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும், அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக நெருக்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் படங்களை தயாரிக்க உள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று “G Squad” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

உறியடி படத்தை இயக்கி, நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் குமார் தான் லோகேஷ் கனகராஜின் “G Squad” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை இயக்குகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

உத்தரகாண்ட்: 17 நாள் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு!

’அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்க்கவே முடியாது’: நீதிபதிகள் வேதனை!

‘உங்களுக்கு அடையாளம் தந்தவர்’ அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel