நடிகர் ஃபகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான ஃபகத் பாசில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில் தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் உறுதியான இடத்தை பிடித்துள்ளார் ஃபகத் பாசில்.
ரசிகர்களால் செல்லமாக ஃபாஃபா என்று அழைக்கப்படும் இவர் இன்று (ஆகஸ்ட் 8) தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தள வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/PushpaMovie/status/1688780714224095232?s=20
இந்நிலையில் ஃபகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் உள்ள ஃபகத் பாசிலின் லுக் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக புஷ்பா 2 படத்தில் ஃபகத் பாசில் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் சுகுமார் அறிவித்திருந்தார்.
’புஷ்பா தி ரூல்’ (புஷ்பா 2) படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
மோடி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்? ஏன் நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை?: டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி!