விஜய்சேதுபதியின் ‘டிரைன்’ : படப்பிடிப்பு நிறைவு!

Published On:

| By Selvam

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘டிரைன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என அந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘டிரைன்’ என்கிற திரைப்படம் உருவாகிறது என்கிற அறிவிப்பு அப்படக்குழுவால் சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில், நாசர். நரேன், கே.எஸ்.ரவிகுமார், பாவனா, யூகி சேது, சிங்கம் புலி, அஜய் ரத்னம், ராச்சல் ரெபெக்கா, கணேஷ்  வெங்கட்ராமன், பப்லு பிரித்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள ‘பிசாசு – 2’ திரைப்படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து மற்றொரு படத்தை தான் இயக்கவுள்ளதாக தான் நடித்த ‘மாவீரன்’ படம் தொடர்பான பேட்டிகளில் மிஷ்கின் தெரிவித்தார்.

அதன்படி, மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் இந்த ’டிரைன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த ’டிரைன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானிடம் இசையமைக்க இப்படக்குழு அணுகியதாக பல்வேறு செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குநர் மிஷ்கினே இசையமைக்கவும் உள்ளார் என பின்னர் அறிவிக்கப்பட்டது. மிஷ்கினின் சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் உருவான ‘டெவில்’ திரைப்படத்தில் தான் முதன் முதலாக இசையமைத்தார் மிஷ்கின்.

இந்த நிலையில், ’முகமூடி’ படத்திற்கு பின் இணையும் நடிகர் நரேன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘டிரைன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவானது என்றும், அந்தப் படப்பிடிப்பில் மிக ஆழமான கொண்டாட்ட அனுபவங்கள் கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஃபௌசியா ஃபாத்திமா ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீவட்சன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொள்ளவுள்ளார்.

டப்பிங் பணிகள் மட்டும் மீதமுள்ள இந்தத் திரைப்படம் இந்தாண்டு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘பிக் பாஸ் சீசன் 8’ – இன் புதிய தொகுப்பாளராக தொகுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மேலே ஏவுகணை பறக்குது, கீழே எப்படி விளையாட முடியும்? – மோகன் பகான் அணி சந்தித்த பிரச்னை!

விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு!

பிக் பாஸ் வீட்டில் கழுதை… போட்டியாளர்களுடன் தங்க ஏற்பாடு!

’மகாராஜா ‘ நிதிலனுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

கிறுக்கு பிடித்த ட்ரோலர்ஸ் … தலையை பிய்த்துக் கொள்ளும் பிரியா மணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share