தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ !: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On:

| By Sharma S

சமீபத்தில் வெளியான ‘ராயன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் இறங்கினார் தனுஷ். அதன் படி, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ ஆகிய இரண்டு படங்களை தனுஷ் இயக்குகிறார் என்கிற அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின.

இந்த நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படம் குறித்த அப்டேட் இன்று(நவ.8) காலை 11:00 மணிக்கு வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். படத்தின் ரிலீஸ் தேதி அல்லது டீசர், டிரெய்லர் குறித்தான அப்டேட்டாக இருக்கக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தற்போது, ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் தனுஷ்.

அந்தப் போஸ்டரில் திரும்பிய படி தனுஷ் நிற்க, அவருக்கு முன்னாள் ‘சிவனேசன் இட்லி கடை’ என்கிற ஒரு கூரைக் கடை இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்.10ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டாவ்ன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், தனுஷின் வுந்தர்பார் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

மேலும், இந்தத் திரைப்படம் தனுஷ் இயக்கி வெளியாகவுள்ள நான்காவது திரைப்படமாகும். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் இயக்கும் மற்றோரு படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர். அந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ’ என்கிற பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்!

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel