அல்லு அர்ஜுன் நடித்த “புஷ்பா” திரைப்படம் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்த “கார்கி “ திரைப்படம் மாஸ்கோ திரைப்பட விழாவில் இன்று (ஆகஸ்ட் 31 ) “பிளாக் பஸ்டர் ஹிட்ஸ்” என்ற பிரிவின் கீழ் திரையிடப்பட்டுள்ளது.
இதை மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா‘ திரைப்படம் 2021 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் வெளியாகியது.

இது குறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் ,
“புஷ்பா – தி ரைஸ்: பார்ட் 1” திரைப்படம் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் “பிளாக் பஸ்டர் ஹிட்ஸ்” பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்..
சுகுமார் பந்த்ரெட்டி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான “புஷ்பா – தி ரைஸ்: பார்ட் 1” திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றியை பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் , சாய் பல்லவி நடிப்பில் இந்த ஆண்டு ஜூலை 15 வெளிவந்த “கார்கி “ படத்தை பற்றி குறிப்பிடுகையில் , விமர்சகர்களால் பரவலாக பாராட்டப்பட்ட கார்கி திரைப்படம் , 2022 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ரசிகர்களை தொடர்ந்து சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கார்கி திரைப்படம் ”பிளாக் பஸ்டர் ஹிட்ஸ்’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்