‘அடிச்சவன் யாரோ’ வனிதா விஜயகுமாருடன் நேரடியாக மோதிய கஸ்தூரி

Published On:

| By Manjula

actress kasturi comment about vanitha

பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் தன்னை தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்த நிலையில், நடிகை கஸ்தூரி அதற்கு பதில் அளித்துள்ளார்.

கடந்த நவம்பர் 26-ம் தேதி நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு அளித்தது தொடர்பாக, அவரது ஆதரவாளர் ஒருவர் தன்னை தாக்கி விட்டதாக புகைப்பட ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி இருந்தார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது. மேலும் இரண்டு கன்னங்களிலும் அடிபட்டது போல வனிதாவின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இதனால் உண்மையில் அடிபட்டது எந்த கன்னம்? என ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய எக்ஸ் தளத்தில், வனிதா விஜயகுமாருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப்க்கும், விஜய் டிவிக்கும் கண்டெண்ட்க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா” என பகிரங்கமாக கிண்டலடித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த நேரடி தாக்குதலுக்கு நடிகை வனிதா விஜயகுமார் இன்னும் பதில் அளிக்கவில்லை. என்றாலும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

ஏமாத்திட்டு போன பணத்தை பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும்:சமுத்திரக்கனி காட்டம்

அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த மாட்டேன்: ஓபிஸ்

புயலாக மாறும் காற்றழுத்தம்: இந்திய வானிலை மையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.