அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் செகண்ட் லுக் இன்று (செப்டம்பர் 22) வெளியானது.
அஜித்குமார் நடிக்கும் 61-வது படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (செப்டம்பர் 21) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

நடிகர் அஜித்குமார், இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில், மூன்றாவது திரைப்படமாக துணிவு உருவாகி வருகிறது
துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 1985-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் துணிவு படத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நேற்று (செப்டம்பர் 21) துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று (செப்டம்பர் 22) மதியம் 12.30 மணியளவில் துணிவு திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.
“No guts, No glory” என்ற வாசகத்துடன் நடிகர் அஜித் மாஸாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
செல்வம்