குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்த நடிகை ஷாலினி, அதன் பிறகு ஹீரோயின் ஆக காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே போன்ற திரைப்படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயினாக மாறினார்.
அமர்க்களம் படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் அஜித்தும் நடிகை ஷாலினியும் காதலிக்க தொடங்கிவிட்டனர். அதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகை ஷாலினி சமீப காலமாக அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் நடிகர் அஜித்துடன் இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் அஜித்தின் படம் குறித்த போஸ்டர்களையும் பகிர்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் தனது பெயரில் ஒரு போலி கணக்கு உள்ளது தயவு செய்து யாரும் அதனை பின்தொடர வேண்டாம் என்று நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷாலினி பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் அந்த போலியான எக்ஸ் பக்கத்தை ஏற்கனவே 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷாலினியின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி அந்த போலி கணக்கை unfollow செய்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக 17, காங்கிரஸ் 1 இடங்களில் முன்னிலை – தேர்தல் ஆணையம்!
2024 தேர்தல் முடிவு : திமுக கூட்டணி முன்னிலை!
வாக்கு எண்ணிக்கை : பாஜக – இந்தியா கூட்டணி முன்னணி நிலவரம் என்ன?
நாடாளுமன்ற தேர்தல்… ஜெயிக்கப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!