புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். actor vijay request
மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் செயல்பாடு குறித்தும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் பலரும் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (டிசம்பர் 6) இரவு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம்… துயர்துடைப்போம்!” என்று நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
மதுபானங்களுக்கு அதிக வரி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்!
பியூட்டி டிப்ஸ்: அலுவலகத்தில் எப்போதும் ஃப்ரெஷ் லுக்கில் வலம் வர வேண்டுமா?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
actor vijay request