‘தக் லைஃப்’ படத்தில் இருந்து முன்னணி நடிகர் விலகல்!

Published On:

| By Manjula

dulquer salmaan opts out thug life movie

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து, முன்னணி நடிகர் ஒருவர் விலகியிருக்கிறார். dulquer salmaan opts out thug life movie

‘நாயகன்’ படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’. இதில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

dulquer salmaan opts out thug life movie

கமலின் 234-வது படமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இந்தநிலையில் இப்படத்தில் இருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் விலகியிருக்கிறார்.

முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடித்திட சிம்புவைத் தான் மணிரத்னம் அணுகினாராம். ஆனால் 48-வது படத்திற்காக தோற்றத்தினை மாற்றி இருப்பதால் சிம்புவால் நடிக்க முடியாமல் போக, பின்னர் தான் துல்கரை மணிரத்னம் புக் செய்தாராம்.

dulquer salmaan opts out thug life movie

துல்கர் தற்போது சூர்யா – சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘புறநானூறு’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார். அதோடு ‘லக்கி பாஸ்கர்’, ‘காந்தா’ ஆகிய மலையாள படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார்.

இதனால் கால்ஷீட் பிரச்சினைகள் உருவாகவே, தற்போது துல்கரும் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

இதையடுத்து ‘தக் லைஃப்’ படத்தில் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள்? என்பது தெரியவில்லை.

dulquer salmaan opts out thug life movie

என்றாலும் மணிரத்னத்தின் ஆஸ்தான ஹீரோக்களில் யாரேனும் ஒருவர் அந்த வேடத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிடலாம்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜய் தேவரகொண்டாவின் “ஃபேமிலி ஸ்டார்” டீஸர் எப்படி..?

கடந்த முறை போல் ஆகக் கூடாது… களமிறங்கிய கதிர் ஆனந்த்

dulquer salmaan opts out thug life movie

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel