தனித்துவமான ஃபேஷன் டிசைன்களை கண்டறிந்து வெளிப்படுத்த இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இந்த நிலையில் டிரெண்டுகளை பின்பற்றுவது நல்லதுதான். ஆனால், உங்களுக்குப் பிடித்தமான, உங்களுக்கு நன்றாக பொருந்தக்கூடிய டிசைன்களைக் கண்டறிவது முக்கியம். அதனால், பல்வேறு டிசைன்களை முயற்சி செய்து உங்களுக்கு எது பிடித்துள்ளது, எது நன்றாக இருக்கிறது என்பதை முயற்சி செய்து பார்த்து உங்களுக்கேற்றதை தேர்ந்தெடுங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உடல் அமைப்பு இருக்கும். அதற்கு ஏற்ற டிசைன்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தோற்றத்தை சிறப்பாக மேம்படுத்தலாம்.
ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள் உடலுடன் ஒட்டி இருக்கும் வகையில் ஆடை அணிவது நல்லது. இதுவே குண்டாக இருந்தால், அதிக தளர்வாக இல்லாமல் உங்களை ஒல்லியாகக் காட்டும்படியான ஆடைகளைத் தேர்வு செய்யவும்.
ஆடை விஷயத்தில் எப்போதும் மலிவை நோக்கி செல்லக்கூடாது. உயர்தர ஆடைகள் உங்களை மற்றவர்கள் மத்தியில் சிறப்பாக காண்பிக்க உதவும். சில நேரங்களில் உயர்தர ஆடைகளை வாங்குவது அதிக மலிவான ஆடைகளை வாங்குவதைவிட சிறந்தது. தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
ஆக்சஸரிஸ் எனப்படும் கூடுதல் அழகு உபகரணங்கள் உங்கள் ஸ்டைலுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்க சிறந்த வழியாகும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள், தொப்பிகள், கூலிங் கண்ணாடிகள், காலணிகள் மற்றும் பைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை டீன் ஏஜுக்குக் கூடுதல் அழகு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு
சாம்சங் போராட்டம் முடிந்ததா? இல்லையா? – தொடரும் சர்ச்சை!