விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா வைரல் டான்ஸ் வீடியோ!

Published On:

| By Monisha

virat kholi anushka sharma dancing video

அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் அவ்வப்போது அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனுஷ்கா ஷர்மா ஒரு நடன வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ ஜிம்மில் எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபி பாடலுக்கு இருவரும் ஒன்றாக ஒரு காலை மடக்கி கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு காலை தரையில் வைத்து நடனமாடுகின்றனர்.

அப்போது விராட் காலில் தசை பிடிப்பு ஏற்படுவதால் அவர் நடனமாடுவதை நிறுத்தி விடுகிறார். தொடர்ந்து அனுஷ்கா ஷர்மாவும் சிரித்துக் கொண்டே நடனமாடுவதை நிறுத்தி விடுகிறார்.

இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா ஷர்மா பகிர்ந்து ’நடனமாட வாய்ப்பு” என்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த பலரும், “விராட் கோலி நீங்கள் நலமாக உள்ளீர்களா” என்று நலம் விசாரித்துள்ளனர். மேலும் சிலர், “இந்த வீடியோவை பார்த்து சிரிப்பதை நிறுத்த முடியவில்லை” என்று கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மோனிஷா

மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்க : கமல்

‘12 மணி நேர வேலை’: மே 12 போராட்டம் நிறுத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share