ஆம்லெட் என்றாலே முட்டைதான் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது முட்டையில்லாமலேயே விதவிதமான ஆம்லெட்டுகள் தயாராகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த பிரெட் வெஜ் ஆம்லெட். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கும் இந்த அசத்தல் ஆம்லெட்டைக் கொடுத்து அனுப்பலாம்.
என்ன தேவை?
சால்ட் பிரெட் துண்டுகள்- 8
கடலை மாவு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் – மூன்றும் சேர்த்து ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலை மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் நன்கு கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடேற்றி, சிறிது எண்ணெய் ஊற்றி பிரெட் ஸ்லைஸை போட்டு அதன் மேல் ஒரு கரண்டி கடலை மாவை பரவலாக ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மெதுவாக மறுபக்கம் திருப்பிப்போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக எடுக்கவும். தேவைப்பட்டால், இதை முக்கோணமாக கட் செய்து சிறிதளவு சீஸ் துருவலைத் தூவி லஞ்ச் பாக்ஸில் வைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பர்கர்!
கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி!