நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட ஒரு பிளாக் டீ, ஒரு லைட் டீ ஆர்டர் சொல்லிட்டு இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.
“அப்புறம் என்னப்பா… நேத்து மாநாட்டுல விஜய் தீபாவளி ஆஃபர அனோன்ஸ் பண்ணிட்டாரு போலயேன்னு” நண்பர் கேட்டாப்ல.
“ஆமாமா… ஆட்சியில பங்கு தான சொல்றீங்க. இப்பவே நம்ம திமுக கூட்டணிக்குள்ள இதை பத்தி தான் ஒரே பேச்சா இருக்குன்னு” சொன்னேன்
அதுக்கு நண்பர், “பரவாயில்ல விஜய் முந்திக்கிட்டு தீபாவளிக்கே ஆஃபர அனோன்ஸ் பண்ணிட்டாப்ல. பாவம் நம்ம எடப்பாடி ஐயா தான் பொங்கலுக்கு அனோன்ஸ் பண்ணுவாருன்னு நினைக்குறேன்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
AAP `இந்தியா கூட்டணிக்கு ஆதரவு’ – மகாராஷ்டிரா தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட ஆம் ஆத்மி #அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

Mannar & company™
ஆண்களின் மறதி ‘ஜிப்பு’ போடுவதிலும், பெண்களின் மறதி ‘உப்பு’ போடுவதிலும் இருக்கிறது!

ச ப் பா ணி
Punctuality க்கு ஸ்பெல்லிங் தெரியும். அர்த்தம் தெரியாது பலருக்கு

செங்காந்தள்
பாஜக எங்கள் சித்தாந்த எதிரி- தவெக. எங்களுக்கு ஓய்வே இல்லை -அமலாக்கத் துறை

Dr. M. A. N. Loganathan
தீபாவளி வந்தாலே குதூகலமாயிடறாங்க மாமா
சின்னக் குழந்தைங்களா மாப்ள
சுகர் டாக்டருங்க மாமா

செங்காந்தள்
உறவின் பெயர் தெரியாத போது, அங்கிளும், ஆண்டியுமே காப்பாற்றுகின்றனர்.!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..?
# இந்த நகைச்சுவைக்கு நேத்து நைட் முழுக்க சிரிச்சதுல இன்னைக்கு ஆபிஸுக்கு லீவு போட வேண்டி இருக்கும் போல.. இனிமே மாநாடு எல்லாம் சனிக்கிழமை சாயங்காலமா நடத்துங்ன்னா..
ஞாயிறு லீவு, சிரிக்க வசதியா இருக்கும்

கடைநிலை ஊழியன்
மாச கடைசி என்றால் என்னவென்று தீபாவளிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் மாச கடைசியில் வருமா !!

????????????????????????????
Even in a class today One of third standard boy was asking another boy. ~ நீயும் விஜய் மாதிரி ஓட்டு கேக்க போறியா?? Me to him: ஏன்டா night உக்காந்து TV பார்த்த போல. ~ நான் மட்டும் இல்ல எங்க வீட்ல எல்லாரும் theatre ல படம் பாக்குற மாதிரி இதை தான் பார்த்தாங்க.

படிக்காதவன்™
வாட்ஸ்அப்’ல ஸ்டேட்ஸ் வச்ச பிறகு எத்தனைபேர் பாத்துருக்காங்கனு வச்ச ஸ்டேட்ஸை சும்மா சும்மா நாமளே பாக்குற மனநிலை எந்த மாதிரியான மனநிலைனு தான் தெரியல…
லாக் ஆஃப்