சிவகங்கை தொகுதியில நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமா? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

Update Kumaru march 24 2024

வருமா வராதான்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஒரு வழியா நேத்து நைட்டு 10.45-க்கு ரிலீஸ் பண்ணிருக்காங்க…

இதுபத்தி நண்பர் ஒருத்தர்கிட்ட இன்னைக்கு பேசிக்கிட்டு இருந்தேன்…

அப்போம் அவரு, “சிவகங்கை மக்கள் தான் இப்போம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்கன்னு” சொன்னாப்ல…

ஏன்னு அவருக்கிட்ட கேட்டேன்…

“ஆமா…பின்ன கார்த்தி சிதம்பரம் மீண்டும் எம்.பி ஆனா எல்லோருக்கும் இலவச நெட்பிளிக்ஸ்  சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்போறாருன்னு” சொன்னாப்ள…

இது கார்த்தி சிதம்பரத்துக்கு தெரியுமா?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Writer SJB
வானிலை அறிவிப்பு :-அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் அதுக்கப்புறமாவது குறையுங்களா..?

இல்ல பழகிடும்..!!!

ச ப் பா ணி

என்னை விட்டுப்
பிரியமாட்டேன் என்கிறாய்
கண்டிப்பாய் இது தேர்தல் வாக்குறுதியாய் தான் இருக்கும்

Writer SJB
குடிப்பவன் கெட்டவன் அடுத்தவர் குடியை கெடுப்பவன் கேடு கெட்டவன்.. சொல்லனும்னு தோணுச்சு..!
mohanram.ko
தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா?” ~ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கிடுக்குப்பிடி கேள்வி
அடுத்த மாசம் அவுங்க நகை எடுக்க போறாங்கடோய்… அதை நான் கண்டுபிடிச்சிட்டேன்டோய்

ச ப் பா ணி

அவள் இல்லாததால்
ஞாயிறும் திங்கள்தான்!

Update Kumaru march 24 2024

 

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
உங்கள் காதலி ஆசையாக கேட்டதற்காக முன்பு எப்போதோ கடற்கரையில் நீங்கள் பாடிக்காட்டிய சினிமா பாடல் கறிக்கடை ரேடியோவில் ஒலித்து கொண்டிருக்கிறது.. நீங்களோ அதைப்பற்றிய துளி பிரக்ஞையும் இல்லாமல் உங்கள் மனைவி வாங்கி வரச்சொன்ன கறி குறையின்றி கிடைக்குமா என்ற கவலையில்..!
Update Kumaru march 24 2024
வாழை_வை_சு_பா
பொண்டாட்டியும், குழந்தையும் ஒண்ணுதான் நாம சொல்ரது காது கொடுத்து கேக்கவே மாட்டாங்க
Update Kumaru march 24 2024

mohanram.ko

கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம்,.. …அண்ணாமலை

இப்ப இவரு வந்து பிரச்சாரம் பண்ணதுல இருந்து, ஊரே ஜில்லுனு ஆகிப்போச்சி… கோவையை இன்னொரு சிம்லா னு சொல்றாங்க

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகத்தில் திமுக அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி

மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share