வச்சான் பாரு ஆங்கிள்– அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நேத்துல இருந்தே சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியில அமித்ஷா  தமிழிசையை கண்டிக்கும் தொனியில பேசுன வீடியோ தான் வைரலா போய்க்கிட்டு இருக்கு…

இதுபத்தி நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தப்போம், “அமித்ஷா எனக்கு அறிவுரை தான் சொன்னாருன்னு தமிழிசை இன்னைக்கு விளக்கம் கொடுத்துருக்காங்க… ஆனா… நம்ம அமித்ஷா இதை பத்திலாம் கவலைப்படலையாம்… பதவியேற்பு விழாவுல தமிழிசைக்கிட்ட பேசுன வீடியோ ஆங்கிள் வச்ச கேமரா மேன தேடிக்கிட்டு இருக்காராம்னு” ஜாலியா கமெண்ட் பண்ணாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஆபிஸ்ல எதுனா டவுட் கேட்டுட்டே இருக்கறவனுகளை சமாளிக்க ஒரு எளிய வழி.. ஒரு டவுட்டுக்கு பதில் சொல்லி தந்தப்புறம் அதுல ஒரு வேலையை தந்து, ‘முடிச்சுட்டு வந்து சொல்லு உனக்கு புரிஞ்சுதான்னு செக் பண்ணனும்..’னு சொல்லிட்டா அதுக்கப்புறம் நம்ம பக்கமே வர்றதில்லை. #verified

கடைநிலை ஊழியன்

மஸ்க் நவ் – like பண்ணுங்க.. comment பண்ணுங்க.. RT பண்ணுங்க.. ஆனா like மட்டும் யாருக்கும் தெரியாம பண்ணுங்க..

Mannar & company™

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் சந்தித்து கொண்ட பாலய்யா மற்றும் ஓ.பன்னீர்செல்வம்! நான் பாலய்யா நீங்க? ஓபிஎஸ் ~நான் பாவம்ய்யா..!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

லக்னோவில் இருந்து டேராடூன் செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பயணச்சீட்டு இல்லாமல் முறைகேடாக பயணிக்கும் வீடியோ வைரல்

# IRCTC be like: அப்புறம் என்னப்பா..? ஸ்டேசன்ல எல்லாரும் இறங்கினப்புறம் காலி டிரெயினை வீடியோ எடுத்து போட்டு அப்படி யாரும் போகலன்னு மறுப்பு வெளியிட வேண்டியதானே?

கடைநிலை ஊழியன்

to my inferiority complex.. யாருடா நீ.. நா எங்க போனாலும் கூடவே வர..

ஏன் மேடம்,உள் துறை அப்பிடீன்னா உள்ள வச்சி திட்றதுன்னு நினச்சிங்களா? ரொம்ப சாரிங்க மேடம்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழிசை – அண்ணாமலை… ஒன்றாக போஸ் கொடுக்க உத்தரவு!

போன் டேப் வழக்கு: சவுக்கு சங்கர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel