நேத்து பிரெண்டோட கல்யாணம் சிறப்பா முடிஞ்சது. இன்னைக்கு காலைல எந்திச்சதும் அவன் வீட்டுக்கு போனேன்.
அங்க போனா பின்னாடி இருக்குற தோட்டத்துல உக்காந்துகிட்டு நண்பன் அழுதுட்டு இருந்தான். என்னடானு கேட்டா ‘எதிர்காலத்த நெனச்சி அழுதுட்டு இருக்கேன்’னு சொன்னான்.
என்னடா, நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது. அதுக்குள்ள எதிர்காலத்த நெனச்சி யோசிக்கிறானே.. பரவால்லயேனு ஆச்சரியப்பட்டு.. ’நீ கலங்குற அளவுக்கு அப்படி என்ன எதிர்காலத்துல கண்ட’னு கேட்டேன்.
அதுக்கு அவன், நாளைக்கு ஆடி பொறக்குதுலா… அத நெனச்சி தாண்டா அழுகுறேன்’னு சொல்றான்…
அதுசரி… நான் கூட திருந்திட்டானோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்… பாவம் அவன் கஷ்டம் அவனுக்கு….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
சரவணன். ????
”ஒரு தொழிலதிபர் விரும்பியதால் 13 பேரை சுட்டுக் கொன்றது போலீஸ்!” – சென்னை உயர் நீதிமன்றம்!
எடப்பாடி ~
அந்த தொழிலதிபர் யாருன்னு தெரியலையே.. யாரா இருக்கும்.. எதுக்கும் டிவியை ஆன் பண்ணி பார்ப்போம்..
✒️Writer SJB✒️
தேர்தல் சமயத்தில் போலீஸிடம் சிக்கிய நான்கு கோடி ரூபாய் பண விவகாரம் தொடர்பாக கேசவவிநாயகத்தை விசாரிக்க ஹை கோர்ட் தடை விதித்திருந்தது
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ததும் கேசவவிநாயகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது..!
அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?
வேலு
மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்ற 3 மாதத்தில் பாஜகவில் சேர்ந்தார்
மோடி ~ அண்ணனுக்கு ஒரு கவர்னர் பதவி பார்சல்…
Tamil_Typist
இன்று நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டியாச்சு
நிர்மலா சீதாராமன் staff எல்லோருக்கும் கொடுத்தார்
மக்களுக்கு, particularஆ salaried classக்கு July 23rd அன்று கொடுப்பார்
யாரோ
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம்னு கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்கும்போதே சொல்றாங்கன்னா,
ஏப்ரல், மே-ல் என்ன சொல்வாங்களோ?
ச ப் பா ணி
சிறிய கட்சியிலிருந்து பெரிய கட்சியில் சேர்வது..
டிப்ளமோ முடிச்சிட்டு நேரடியா செகண்ட் இயர் பி.இ சேர்வது போல
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
லிட்டில் பிரின்சஸ் : அப்பா.. நான் போனப்புறம் வீடே வெறிச்சோடி போன மாதிரி இருக்கும்லப்பா..?
டாட்: ஒவ்வொரு தடவை வந்துட்டு போகும் போதும் சட்டி பானை முதக்கொண்டு எடுத்துட்டு போயிட்டா, வீடு வெறிச்சோன்னு தாம்மா இருக்கும்..
கடைநிலை ஊழியன்
she – நா எது சொன்னாலும் கேட்பியா டா..
he – சொல்லு, கேக்குறேன்..
she – நம்ம break up பண்ணிக்கலாம்.. நா எது சொன்னாலும் கேக்குறவான எனக்கு பிடிக்காது..
கோவிந்தராஜ்
“உங்களை தலைமேல் வைத்து கொண்டாடுபவர்களிடம்” இருந்து சற்று தள்ளியே இருங்கள்,
எப்போது வேண்டுமானாலும் “தரையில் எறிந்து காயப்படுத்தும் அளவுக்கு அபாயம் கொண்டவர்கள்” அவர்கள்..!!
#யதார்த்தம்
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடும் வெப்பத்தால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள்!
காவிரி நதி நீர் விவகாரத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!
இன்னும் 5 நாட்களே உள்ளது… கூடுதலாக 1000 காலி பணியிடங்களை சேர்த்த டி.ஆர்.பி