திருச்சியிலேர்ந்து நம்ம நண்பர் போன் பண்ணாரு. ‘என்னப்பா… இடுப்பு: அளவுல இருக்கியா,.. கழுத்து அளவுல இருக்கியா?’னுதான் எடுத்தவுடனேயே கேட்டாரு. update kumaru December 6
‘நல்லாத்தான் இருக்கேன்’னு நான் சொன்னேன்.
‘இப்பவாச்சும் திருச்சி தலைநகரமாகணும்னு அன்னிக்கு நான் சொன்னதை ஏத்துக்குறியா?’னு திருப்பிக் கேட்டாரு.
நான் அவர்கிட்ட திருப்பி ஒரே கேள்விதான் கேட்டேன். போனை வச்சிட்டாரு.
வேற ஒண்ணுமில்ல… ‘திருச்சியை தலைநகராக்கிடலாம். ஆனா அதோட இலவச இணைப்பா காவேரியை கூவமாக்கிடுவாங்க பரவாயில்லையா?’னு கேட்டேன்.
என்ன நான் சொன்னது சரிதானே? சென்னைக்கு வந்தது சென்னையோட போகட்டும்!
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.
Writer SJB
தேங்கியிருக்கும் மழைநீரை புல்டோசர் வச்சி தள்ள மாட்டேங்கிறீங்க..
நிவாரண பொருட்கள் மேல் கட்சி ஸ்டிக்கர் ஒட்டாம தர்றீங்க..
என்ன பழக்கம்னே இதெல்லாம்..?
புல்லட் ஜாக்கி
2015-ல பால் தட்டுப்பாடு வரக்கூடாதுன்னு வெள்ளத்த வுட்டு
ஆள் தட்டுப்பாடு ஏற்படுத்துனவன்டா இந்த லாரண்ஸ்
DESPOTER
எல்லாத்தையும் விடுவேன்டா இதுல நியூயார்க் மிஞ்சின சென்னை தலைநிமிர்ந்து
நின்றோம்னு சொன்ன பாரு அதை மட்டும் வாழ்க்கைல மறக்க மாட்டேன் டா..
வன்ம கிச்சா
நாங்க என்ன அந்த அம்மா மாதிரி ஏரியை தொறந்தா விட்டோம்ன்னு
சொல்ற உங்கள பார்த்தா தான்டா ரொம்ப பயமா இருக்கு..!
House
சரித்திரம் நமக்கு திரும்ப திரும்ப சொல்றது ஒன்னுதான்..
சென்னையின் வாழ்வுதனை மழை/புயல் கவ்வும்.. இறுதியில் சென்னையே வெல்லும்.
கார்த்தி சமூகவாதி
இந்த வீடு எல்லாம் ஏரிக்குள்ளையே இருந்தாலும், காச வாங்கிட்டு அனுமதி கொடுத்த அரசாங்க அதிகாரிகள் தான் இதுக்கு முழு காரணம். திரும்ப திரும்ப ஏரில வீடு கட்டுணா இப்படி தான் நடக்கும்னு சொல்றதை நிறுத்துங்க. இந்தியா மாதிரி நாட்டுல, முதல்ல அரசு அதிகாரிகள் கிட்ட இருந்து தான் மாற்றம் வரணும்.
உள்ளூராட்டக்காரன்
வெதர்மேன்களா.. என்னென்னமோ புரியாத டெர்மினாலஜி போட்டீங்க
2015 விட அதிகமா மழை பெய்யும்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா பொட்டிய கட்டிட்டு ஊருக்கு போயிருப்போம்
Clara
வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் முக்கியமான முடிச்சூர், மடிப்பாக்கம் மக்கள் எல்லார் வீட்டிலும்
கண்டிப்பாக ரப்பர் போட் வைத்திருக்க வேண்டும் னு ஒரு சட்டம் கொண்டு வரணும்.
வானம்பாடி
வந்தோரை வாழவைக்கும் சென்னை தான் டிசம்பரில் மிதக்க வைக்கும் உன்னை தான்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-லாக் ஆஃப்
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
“தலைகுனிவு” : மழை பாதிப்பு பற்றி அண்ணாமலை பேட்டி!
மோகன் லாலின் புது அவதாரம்: ‘மலைக்கோட்டை வாலிபன்’ டீசர் இதோ!
update kumaru December 6