பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… இந்த மூன்றே பொருட்கள் போதும்!

Published On:

| By christopher

Three Ingredients for Glowing Skin

அழகாக இருப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது? அந்த அழகைக் கொண்டு வருவதற்கு ஏராளமான அழகு சாதனங்களைப் பயன்படுத்தத் தேவையே இல்லை. வெறும் மூன்றே பொருட்களில், உங்கள் சருமத்தைப் பளபளக்கச் செய்யலாம்.

அந்த வகையில்… முதலில் சருமத்தில் இருக்கும் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்க வேண்டும். இதற்கு ‘க்ளென்சர்’ (Cleanser) பயன்படுத்த வேண்டும்.

அடுத்தது, சருமம் வறட்சியடையாமல் காக்க `மாய்ஸ்ச்சரைசர்’ (Moisturizer) உபயோகிக்க வேண்டும்.

மூன்றாவது, ‘சன்ஸ்கிரீன்’ (Sunscreen). இந்த மூன்றும் தான் சருமப் பராமரிப்பில் அடிப்படை. சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப இந்த மூன்று பொருட்களையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினாலே போதுமானது.

இந்த CMS (Cleanser – Moisturizer – Sunscreen)  ஃபார்முலாவை சரியாகப் பின்பற்ற உங்கள் சருமம் எந்த வகை என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகுதான் சருமப் பராமரிப்பில் இறங்க வேண்டும்.

காலையில் தூங்கி எழுந்தவுடன், எந்த மேக்கப்பும் இல்லாதபோது நம்முடைய சருமம் எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். சாதாரண அறை வெப்பநிலையில் சராசரியாக 8 மணி நேரம் தூங்கி எழும்போதே கொஞ்சம் எண்ணெய்த்தன்மை, கொஞ்சம் பளபளப்பு இருந்தால் அது எண்ணெய்ப்பசையான சரும வகை என்று சொல்லலாம். ‘கொஞ்சம் வறவறன்னு இருக்கு, இழுக்கற மாதிரி இருக்கு’ என நீங்கள் நினைத்தால் அது வறண்ட சரும வகை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக நம்முடைய மூக்கு, கன்னம் போன்ற இடங்களில் எண்ணெய் சுரப்பும் எண்ணெய்ப் பிசுப்பும் அதிகமாகவே இருக்கும். மற்ற இடங்கள் சாதாரணமாக வறட்சியாக இருக்கும். இதை காம்பினேஷன் சருமம் என்று சொல்கிறார்கள் சரும மருத்துவர்கள். இப்படி உங்கள் சருமம் எந்த வகை என்று தெரிந்துகொண்ட பிறகு சருமப் பராமரிப்பு முயற்சியிலேயே இறங்கலாம்.

ஒருவருக்கே சருமம் வெவ்வேறு நேரங்களில் வேறு வேறு விதமாக இருக்கும். வெயில் காலத்தில் ஒரு மாதிரியும், மழைக்காலத்தில் ஒரு மாதிரியும், பனிக்காலத்தில் ஒரு மாதிரியும் சருமத்தின் தன்மை வேறுபடும். இன்னும் சொல்லப்போனால், ஒருவரின் சருமம் காலையில் ஒரு மாதிரியும் இரவில் வேறு மாதிரியும் இருக்கும்.

ஆக… உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற க்ளென்சரை தேர்வுசெய்து பயன்படுத்த வேண்டியது அடிப்படை.

க்ளென்ஸ் செய்ததும் மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து அதன் பிறகு சன் ஸ்கிரீன் உபயோகித்தால் போதுமானது.

சன் ஸ்க்ரீன் வாங்கும்போது அதில் மாய்ஸ்ச்சரைசர் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

நாம் பயன்படுத்துகிற சன் ஸ்க்ரீன், மாய்ஸ்ச்சரைஸர்ஸ் போன்றவை பக்க விளைவைக் கொடுக்காதவையாக இருக்க வேண்டும். சில தயாரிப்புகளில் இருக்கும் எண்ணெய்த்தன்மையும் பாக்டீரியாவும் சருமத் துவாரங்களில் போய் தங்கி, அடைப்பை உண்டாகி விடும். அதனால் சன் ஸ்க்ரீன், மாய்ஸ்ச்சரைஸர் வாங்கும்போது ‘நான்கொமீடோஜெனிக் (Non-comedogenic) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.

உங்கள் சருமம் பளபளக்க இதுதான் அடிப்படை விஷயங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

கிச்சன் கீர்த்தனா : காஞ்சிபுரம் இட்லி… மிளகு ஸ்பெஷல்!

திருக்கோவிலூர் வட போச்சே…. அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலையை முடக்கு… டெல்லியிடம் TTVயின் ஒரே நிபந்தனை!

தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு : டாடா குழுமம் ஒப்பந்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel