ஃபாஸ்ட் லைஃப் முறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர் மற்ற நேரங்களில் சும்மாயிருந்துவிட்டு உடல் பருமனை உணர்ந்த உடனே குறைக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக இயங்குவார்கள். விரைவாக பருமனைக் குறைக்க நினைத்து ஜிம்மில் சேர்வார்கள்.
ஆனால், ஒவ்வொருவரின் உடலும் உடற்பயிற்சிக்கு வெவ்வேறு விதத்தில் பதிலளிக்கும் என்பதால், ஜிம்மில் உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அவசியம்.
நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
நீங்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, ஜிம்முக்கு செல்லத் தொடங்கினால், இதயநோய் மருத்துவரிடம் உங்களைப் பரிசோதித்துக் கொள்வது அல்லது மன அழுத்தப் பரிசோதனையை முதலில் செய்து கொள்வது அவசியம்.
எந்த வயதினராக இருந்தாலும் உடற்பயிற்சியில் இருக்கும்போது மார்புவலி, சுவாசிப்பதில் சிரமம் அல்லது லேசான தலைவலி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். எந்தவிதமான அதிகப்படியான உடற்பயிற்சியையும் தவிர்க்க வேண்டும்.
இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்ல வேண்டும். காலை 7 மணி முதல் 8 மணி வரை ஜிம்மில் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஜிம்முக்கு போகிறவர் 15 நிமிடங்கள் தாமதமாக 7.15 மணிக்குச் சென்று 8 மணிக்குள் – 45 நிமிடங்களில் ஒரு மணி நேரப் பயிற்சியில் வேக வேகமாக ஈடுபடுவது ஆபத்தானது.
உதாரணத்துக்கு, நிமிடத்துக்கு 72 முறை துடிக்க வேண்டிய இதயத்தை அங்கு வேகமாக இயக்குகிறோம். இதயம் வேகமாக இயங்க… இயங்க… வாழ்க்கையும் வேகமாக முடிந்துவிடுகிறது.
உடல் பருமனைக் குறைக்க உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சி போதுமானது. அதை சீரான முறையில் செய்ய வேண்டும். அதை மகிழ்ச்சியாகச் செய்ய தொடங்கினால் நலமுடன் வாழலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி
தேர்தல் பத்திர நிதி : ரூ.6,060 கோடி வாங்கிய பாஜக – திமுக, அதிமுக வாங்கியது எவ்வளவு?
இந்தியாவிலேயே தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்கள் யார் தெரியுமா?