உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது என்ற இளைஞன் திராவிட மாடல் பதாகையுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
22-வது ஃபிஃபா உலக கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் 8 பிரிவுகளாக 32 அணிகள் பங்குபெற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜாம்பவான் அணிகளான ஜெர்மனி, உருகுவே, பெல்ஜியம் போன்றவை முதல் சுற்றிலேயே வெளியேறி உள்ளன.

ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா போன்ற ஆசிய அணிகள் அர்ஜெண்டினா, ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளன.
கத்தாரில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருவதால் கால்பந்து மைதானத்தில் தோனி, சஞ்சு சாம்சன் ஆகிய கிரிக்கெட் வீரர்களின் பதாகைகளை ஏந்தியபடி புகைப்படங்களை எடுத்து இந்தியர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

குறிப்பாக, இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவருக்கு ஆதரவான பதாகைகளைக் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் காண்பித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அந்தவகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது என்ற இளைஞர் ஸ்டேட் ஆஃப் திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் கூடிய பதாகையுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதாகையில் “உழவன் இல்லையேல், உயிர் இல்லை, உழவன் காப்போம், உயிர் நேயம் பேணுவோம்
உழவனின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஸ்டேட் ஆஃப் திராவிட மாடல், மூலக்கரைப்பட்டி” என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
செல்வம்
மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதா? தலைமை ஆசிரியருக்கு சிறை!
டிசம்பர் 16 : பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டம்!