கோடை வெயில் ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பருவநிலையில் கவனமாக இருக்க வேண்டிய ஓர் உடல்நலப் பிரச்னை, ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke). இதிலிருந்து தப்பிக்க எளிய வழிகள் இதோ….
காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டியவர்கள், கண்டிப்பாக குடை, தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
தளர்வான காட்டன் உடைகளை அணிய வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள், பழச்சாறு, இளநீர், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், பாட்டில் குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கோடையில் யாரேனும் குழப்பமான மனநிலை, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உடல் வெப்பநிலை அதிகமாகி பாதிக்கப்பட்டால் உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். உடனடியாக 108 அம்புலன்ஸுக்கு அழைத்துவிட்டு, மருத்துவமனை செல்லும் வரை ஆடைகளை தளர்த்தி, ஃபேன், ஏ.சியில் வைத்திருக்க வேண்டும். அவரின் உடலில் ஈரத்துணி கொண்டு துடைப்பது, குளிர்ந்த நீரையோ, சாதாரண நீரையோ தெளித்துக்கொண்டே இருப்பது என்று செய்ய வேண்டும். இது, உடல் வெப்பநிலை குறைய உதவும்.
சுயநினைவுடன் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது அவசியம். அதுவே, சுயநினைவு இல்லாமல் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதே வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடலாம் என்பதால் தவிர்க்கவும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இதை காய்ச்சல் என்று நினைத்து பாரசிட்டமால் மத்திரை கொடுப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் மாங்காய் ஊறுகாய்
டிஜிட்டல் திண்ணை: மாறும் வேட்பாளர்கள் யார்? ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!