டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றம், பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் பணப்புழக்கம் குறைந்திருப்பது குறைவாக தெரிந்தாலும், சுலபமான வகையில் வங்கிக் கணக்கு குறிப்போடு செலவிட முடிவதால் அனைவராலும் இந்த UPI, QR code போன்ற அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. qr code transaction warning
எளிமையான, விரைவான பரிவர்த்தனை முறையாக பார்க்கப்பட்டாலும், கண்ணுக்கு தெரியாமல் அதிகமான செலவுகள் வருவதை காட்டிலும் பாதுகாப்பு குறைபாடும் இதனூடே அதிகரித்து வருகிறது என்றால் எந்த மிகையும் இருக்காது.
குறிப்பாக QR code பயன்பாட்டினால் எக்கச்சக்கமான சைபர் குற்றங்கள் நிகழ்வதாகவும், சமூகத்தில் கண்ணுக்கு தெரியாத மோசடி கும்பல்கள் உலவுவதாக சைபர் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக, பொதுவெளியில் QR Code மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது எந்த மாதிரியான முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்ற சில நிலைகள் குறிப்புகளை காணலாம்.
* தெரியாத நபர்களிடம் ஒரு போதும் UPI id, OTP, வங்கி கணக்கு விவரங்களை பகிர கூடாது.
* QR code மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்பினாலோ பெற்றாலோ பெறுநரின் விவரங்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும்.
* ஸ்டிக்கர்ஸ் மீது ஏற்கெனவே இருந்த QR code மீது ஒட்டப்பட்டிருக்கும் மற்றுமொரு QR code-களை ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை முற்றிலும் தவிர்க்கவும்.
* அவசிய தேவை எழாத பட்சத்தில் அநாவசியமாக வங்கி பரிவர்த்தைக்காண இணைப்பில் இருக்கும் மொபைல் எண்களை எவரிடமும் பகிர வேண்டாம்.
* QR code-க்கென இருக்கும் பிரத்யேக, அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் பணம் பறிபோகாமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஸ்கேம் செய்யும் மோசடி பேர்வழிகள் போலி QR code மூலம் வாடிக்கையாளர்களின் தரவுகளை ஹேக் செய்யும் வேலைகளிலும் ஈடுபடுவதாலேயே பொதுமக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல்களை சைபர் போலீசார் விடுத்துள்ளனர்.
பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு
தேர்தல் ஆணையர் நியமன சட்ட திருத்த மசோதா… திமுக கடும் எதிர்ப்பு!
qr code transaction warning