கர்நாடக சமையலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி இந்த மைசூர் போண்டா. டிபன் சென்டர்கள், உணவகங்களில் பலரால் விரும்பி சுவைக்கப்படும் இந்த போண்டாவை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
உளுந்து – கால் கிலோ
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பொரிகடலை (பொட்டுக்கடலை) மாவு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு
எப்படிச் செய்வது?
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் எண்ணெய் தவிர்த்து தேவையானவற்றில் கொடுத்த மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்து வடை மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். மாவை உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் மைசூர் போண்டா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கதம்ப சாம்பார்!
கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டுப் பொங்கல்
’ஆடி’ வந்தது… கண் கலங்குது : அப்டேட் குமாரு
”பஞ்சர் கடை வையுங்கள்” : கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!