வுமன்ஸ் டே விஷ் கூட பேக் ஐடிக்கு தானா? : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

update kumaru trending tweets 54

update kumaru trending tweets 54

இன்னைக்கு காலைல டீ குடிக்க கடைக்கு வந்த சுரேஷு, என்கிட்ட வந்து ’இன்னைக்கு வுமன்ஸ் டே ஆம்ல.. உங்கிட்ட ஏதாச்சு ஒரு நல்ல வாழ்த்து ஸ்டேட்டஸ் இருந்தா அனுப்பி வுடு’னு கேட்டான்.

’ஏண்டா வூட்டுல இருந்து தான வர.. வூட்டுக்காரம்மாவுக்கு நேர்லயே விஷ் பண்ணிருக்கலாமே’னு கேட்டா… விருப்பமில்லயாம்.

அது சரி உங்க அம்மாகிட்ட மொபைலே இல்ல… உன் வூட்டுக்காரம்மாட்ட பட்டன் மொபைலு… இப்போ யாருக்கு ஸ்டேட்டஸ் வைக்க போற?னு கேட்டா…

’ட்விட்டர்ல கனகானு எனக்கு ஆளு இருக்கா மாப்ள… அவளுக்கு விஷ் பண்ணதான் ஸ்டேட்டஸ் கேக்குறேன். அனுப்பி விடு’னு சொல்றான்.

அவனுக்கு நா எப்படி புரிய வைப்பேன்… அந்த கனகாவே என்னோட பேக் ஐடினு… வீட்டுல இருக்கு பொண்டாட்டிக்கு விஷ் பண்ணாம… பேக் ஐடிக்கு வந்து விஷ் பண்ணிட்டு இருக்கானுங்க… யாருடா நீங்களாம்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu

வீட்டு உபயோக சிலினர் விலை ரூ 100 குறைப்பு – செய்தி

அப்போ பேங்க் மானியம் 24 ரூபாய் லிருந்து 24 காசு ஆகிடுமோ

Kirachand

சாப்பிடும்போது மோடிக்கு நன்றி சொல்லிட்டு பிறகு சாப்பிடுங்கள்! – ஆளுநர் தமிழிசை

ஹோட்டல்ல சாப்பிடும்போது பிரதமருக்கு நன்றி சொன்னா பில்லு கொடுக்க வேண்டியதில்லையாண்ணே?

நெல்லை அண்ணாச்சி

சாப்பிடும்போது மோடிக்கு ” நன்றி ” சொல்லி சாப்பிடுங்கள்! – தமிழிசை…

# எங்க அம்மா நன்றி சொல்லுறாங்க…GST க்கு திட்டுறாங்க..!!!

ℳsd இதயவன்

மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது: ~பிரேமலதா விஜயகாந்த்

ஆமா ஆமா மக்களுக்கான கொள்கையில் தான் உறுதியில்லாம போயி விட்டது ?!

ச ப் பா ணி
ஈரோட்டில் உள்ள ஓர் உணவகத்தில் மாமியாரும், மருமகளும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டால் சாப்பாடு இலவசம். – செய்தி

#பொதுநலன் கருதி வெளியிடப்படுகிறது.

கடைநிலை ஊழியன்

மகளிர் தினத்தை ஒட்டி கேஸ் சிலிண்டரின் விலையை ₹100 குறைப்பு..

தேர்தல் தேதி நெருங்குவதை உணர்கிறார் ஜி.

balebalu
ராஜ்யசபா எம்.பி.,யாக நாராயணமூர்த்தி மனைவி சுதா நியமனம்- செய்தி

அப்போ வாரத்துல 70 மணி நேரம் ராஜ்யசபா செயல்பட போகுதா

ச ப் பா ணி

தேதி அறிவிச்சிட்டாங்க.. இனி ஆன்லைனே பரபரக்க போகுது மாமா

எலக்சன் டேட்டா மாப்ள, எலல்சனா.. ஐ பி எல் டேட் மாமா.

update kumaru trending tweets 54

வசந்த்
மகளிர் தினத்தை ஒட்டி கேஸ் சிலிண்டரின் விலையை ₹100 குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு

தேர்தல் முடியட்டும் சும்மா சில்லு சில்லுனு விலையை கூட்டுவார் மேடம்

update kumaru trending tweets 54
முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்.

நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன.

கழுதையும் சென்றது.

கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.

கழுதை நரியிடம் சொன்னது: நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.

அதற்கு நரி சொன்னது: சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்.

கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.

மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது!

கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது.

நரி சொன்னது: நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்.

நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது.

இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது.

சிங்கம் நரியிடம் சொன்னது: பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா.
நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது.
சிங்கம் கோபமடைந்து கேட்டது: மூளை எங்கே?
நரி பதிலளித்தது: அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா?
(மூன்றாவது முறையாக ஏமாறும் கழுதைகளாக நாம் இருக்கவேண்டாம் என்று எச்சரிப்பதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதை இது)

update kumaru trending tweets 54

கோழியின் கிறுக்கல்!!

வீட்டுக்கு வந்த உறவினரை வாசல் வரை வந்து வழி அனுப்புவது,

Gateஐ நன்றாக சாத்துவதற்காகவே!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

Thug Life: ”வெறித்தன காம்போ” தக் லைஃப் படத்தில் இணையும் முன்னணி நடிகர்?

நேற்று அட்மிஷன், இன்று ஆபரேஷன்… அப்பல்லோவில் அஜித்! முழு ஹெல்த் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel