நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட ஒரு லெமன் டீ, ஒரு ஸ்ட்ராங் டீ ஆர்டர் பண்ணிட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பர், “மறுபடியும் ஒரு அமைச்சருக்கு சிக்கலாமேன்னு” கேட்டாப்ல.
“அமைச்சர் ராஜ கண்ணப்பன தான சொல்றீங்க… இப்போ தான் பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுத்தாங்க. அதுக்குள்ள இப்படி ஒரு சிக்கலா? ஆல்ரெடி பால்வளத்துறை அமைச்சரா இருந்த நாசர், மனோ தங்கராஜ மாத்திட்டாங்க. இப்போம் இவரு வேற மாட்டிக்கிட்டாருன்னு” சொன்னேன்.
அதுக்கு நண்பர், “என்னன்னு தெரியல தண்ணில கண்டம் கேள்வி பட்ருக்கேன். ஆனா, நம்ம திமுக அமைச்சர்களுக்கு மட்டும் பால்ல கண்டம் இருக்குற மாதிரி தெரியுதுன்னு” கமெண்ட் அடிச்சாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
✒️Writer SJB✒️
தீபாவளிக்கு துணி எடுக்க போறேன்னு ரொம்ப எக்ஸைட் ஆகாதே,,
சில வருடங்களுக்கு முன் நீ விரும்பி வாங்கிய தீபாவளி துணி தான் உன் கிச்சன்ல இப்ப கரிசட்டி துணியா இருக்கும்..!
balebalu
சண்டையும் பார்க்கிறது மன்னிப்பையும் பார்க்கிறது
ஒரே பார்வை வெவ்வேறு நிகழ்வு
#வீடியோ கேமிரா
செங்காந்தள்
சாக்லேட்டுக்கள் கல்லாக்களில் அறிவிக்கப்படாத நாணயமாய் இருக்கின்றன…
வசந்த்
தீபாவளி வந்துருச்சா?
கணவர்களில் ஒருவர் ~ குக்கர்ல மூன்றாவது விசிலை தவறவிட்ட எல்லா நாளுமே எனக்கு தீபாவளி தான் ப்ரோ..
ச ப் பா ணி
வசீகரமான பொய்கள் தான் ஆறுதல் எனும் பெயரில் சொல்லப்படுகின்றன
????????????????????????????
தீபாவளி பரிசுக்காக காத்திருக்கும் சில பேர்.
தீபாவளி bonus க்காக காத்திருக்கும் சில பேர்.
30 ஆம் திகதி சம்பளம் வந்துடுமான்னு காத்திருக்கும் சில பேர்.
பண்டிகைகள் அனைவருக்கும் ஒரே மாதிரி ஆனது அல்ல!!!
கோழியின் கிறுக்கல்!!
என்னை குறைத்து மதிப்பிடுவதில்,
நீ ஓர் தேர்ந்த ரேஷன் கடை ஊழியர்!!
✒️Writer SJB✒️
நம் தாத்தாவுக்கு தெரியாது நாம் குடிநீரை காசு கொடுத்து வாங்க போகிறோம் என்று,,,
என் பேரனுக்கு தெரியாது அவன் சுவாசிக்க போகும் காற்றை நாளை விலை கொடுத்து வாங்க போகிறான் என்று..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
“சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சென்னை” – எடப்பாடி சுளீர்!
தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு: நீதிமன்றத்தில் சாம்சங் தகவல்!