இது என்னடா காந்திக்கு வந்த சோதனை? – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

எலெக்‌ஷன் ஸ்ட்ராஜிஸ்டா இருந்த பிரஷாந்த் கிஷோர் காந்தி பிறந்தநாளான இன்னைக்கு ஜன் சுராஜ் கட்சியை ஆரம்பிச்சிருக்காரு.

நாங்க ஆட்சிக்கு வந்தா பிகார் மாநிலத்துல மதுவிலக்க தடை செய்வோம். மீண்டும் டாஸ்மாக்க திறப்போம்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு.

தன் வாழ்நாள் முழுக்க மதுவுக்கு எதிராவும், மதத்திற்கு எதிராவும் போராடுன காந்தி பிறந்தநாள்ள இப்படி ஒரு வாக்குறுதியா?

இது என்னடா காந்திக்கு வந்த சோதனை?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

வசந்த்
என்னங்க குக்கர் 3 விசில் அடிச்சுருச்சு போல ஆஃப் பண்ணுங்க
குப்பை வண்டிக்காரன் விசில் அடிக்கிறான் மா…

Sasikumar J
செய்தி : 98 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின…
யாரு கிட்ட தான் இருக்கு மீதி உள்ள 2% 2000 நோட்டுல்லாம் திருப்பி கொடுத்துடுகளேன்…!

ச ப் பா ணி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு தொடங்கியது! |
#ஸ்டார்ட் த மியூசிக்

Mannar & company
அக்டோபர் 2ம் தேதின்னா உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்?
அக்டோபர் 1ம் தேதியே டாஸ்மாக்ல சரக்கை வாங்கி வச்சிடணும்னு வரும்.

கடைநிலை ஊழியன்
டேய் flipkart.. நீ நடத்துறது big billion day இல்ல டா..
Big scam day டா..
#FlipkartBigBillionDays2024

குருநாதா
வாழ்க்கைல பணம் சம்பாதிக்கிறது
பெருசு இல்ல,மனிதர்களையும் சம்பாதிக்கனும்…
எப்படி ?
சம்பாதிச்ச பணத்த குடுத்துத்தான்..

ச ப் பா ணி
ஐநா பொதுச் செயலாளரை நாட்டிற்குள் நுழைய தடை விதித்து இஸ்ரேல் அதிரடி உத்தரவு!*
#கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க

mohanram.ko
எங்கே செல்லும் இந்த பாதை…
கூகுள் மேப் ல பார்த்தா, அப்படி தான்டா குழம்பும்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

லாக் ஆஃப்

மதுவிலக்கு விசாரணை ஆணையம், போதைப்பொருள் மறுவாழ்வு மையம்… விசிக மாநாட்டில் தீர்மானம்!

உதயநிதியின் தனி செயலாளர்: யார் இந்த பிரதீப் யாதவ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share