மீம்ஸ்களால் பிரபலமான சீம்ஸ் நாய் உடல் நலக்குறைவால் நேற்று (ஆகஸ்ட் 18) உயிரிழந்தது.
சமூக வலைத்தள பக்கத்தில் மீம்ஸ்களுக்கு புகழ் பெற்றது ஷிபா வகை நாய் இனத்தை சேர்ந்த பால்ட்ஸே. சோஷியல் மீடியாக்களில் சீம்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் பால்ட்ஸே 1 வயது முதல் ஹாங்காங்கை சேர்ந்த ஒரு குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டு வந்தது.
பால்ட்ஸே என்ற பெயரிலேயே இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கத்தில் சீம்ஸின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தது.
2017ஆம் ஆண்டு ஓர் அழகான புகைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சீம்ஸ், பின்னர் அதன் குறும்புத்தனமான தோற்றங்களாலும் செய்கைகளாலும் உலகளவில் வைரலானது.
இந்த நிலையில் சீம்ஸுக்கு புற்றுநோய் இருப்பது கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்டது. அதற்காக சீம்ஸுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் வந்தது.
நேற்று சீம்ஸுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டது.
சீம்ஸ் உயிரிழந்தது குறித்து பாட்ல்ஸே சமூக வலைத்தள பக்கத்தில், “யாரும் வருத்தப்பட வேண்டாம். பால்ட்ஸே, உங்களின் உலகிற்குக் கொண்டுவந்த மகிழ்ச்சியை இத்தருணத்தில் நினைவில் வையுங்கள். உங்களையும் என்னையும் இணைக்கும் அளவுக்கு உதவிய சீம்ஸ், கொரோனா காலத்தின்போது பலருக்கு உதவியுள்ளது.
உங்களில் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆனால் இப்போது அதன் பணி முடிந்தது. சீம்ஸ் தன் வானத்தில் சுதந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் என நம்புகிறேன்.
அங்கு சீம்ஸ் புதிய நண்பர்களோடு நிறைய சுவையான உணவை சாப்பிடும் என்று நினைக்கிறேன். எப்போதும் சீம்ஸ் என் இதயத்தில் இருக்கும். தொடர்ந்து இணையவாசிகளை அது மகிழ்ச்சியாக்க வேண்டுமென்பதே என் விருப்பம்” என அதன் உரிமையாளர் பதிவிட்டுள்ளார்.
மோனிஷா
திமுக போராட்டம்: சென்னையில் துரைமுருகன் துவக்கி வைக்கிறார்!
மரத்தடியில் பிரியாணி : ஜெயக்குமாரின் மதுரை பயணம்!
டிஜிட்டல் திண்ணை: அதிமுக மாநாடு… எடப்பாடியோடு காரில் சென்ற தீர்மானங்கள்!