சந்திர கிரகணம் இன்று நிகழும் நிலையில் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் எப்போது தோன்றும் என்பதை இங்கு காணலாம்.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சமீபத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்ததை தொடர்ந்து, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் ஆசியா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் இன்று முழு சந்திர கிரகணம் தோன்றுகிறது.
இந்தியாவில் இன்று சந்திரகிரகணம் இன்று மதியம் 2.39 மணியில் இருந்து இரவு அதிகபட்சமாக 7.26 மணி வரை நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியில் நிலவும் நேர மண்டலத்தைப் பொறுத்து, முழு கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதை வெறும் கண்ணால் காணமுடியும்.
முழு சந்திர கிரகணம்!
இந்தியாவில் நிலவும் வானிலை காரணமாக அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பில்லை என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.
வட இந்தியாவில் கொல்கத்தா, கோஹிமா, அகர்தலா குவஹாத்தி போன்ற இடங்களில் மட்டுமே முழு சந்திர கிரகணம் காண வாய்ப்புள்ளது.
கொல்கத்தாவில் கிரகணம் மாலை 04:55 மணிக்கு காணலாம். மாலை 04:52 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். இது 2 மணி 34 நிமிடங்கள் நீடிக்கும்.
கோஹிமாவில் கிரகணம் மாலை 4:29 மணிக்கு அதன் அதிகபட்ச கட்டத்தில் இருக்கும். நிகழ்வு மாலை 04:23 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். இது 3 மணி 2 நிமிடங்கள் நீடிக்கும்.
அகர்தலாவில் மாலை 04:43 மணிக்கு அதிகபட்சமாக கிரகணம் இருக்கும். இது மாலை 04:38 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். இது 2 மணி 47 நிமிடங்கள் நீடிக்கும்.
குவாஹத்தியில் சந்திர கிரகணம் மாலை 4:32 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். மொத்த கிரகணத்தின் காலம் 2 மணி 53 நிமிடங்கள் மற்றும் அதிகபட்சமாக மாலை 04:36 மணிக்கு இருக்கும்.

பகுதி சந்திர கிரகணம்!
அதே நேரத்தில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹதராபாத், டெல்லி, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் பகுதிநேர சந்திரகிரகணத்தை காணலாம்.
டெல்லியில் மாலை 05:31 மணிக்கு அதன் அதிகபட்ச புள்ளியை அடையும். கிரகண நிகழ்வு மாலை 05:28 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும். இது 1 மணி நேரம் 58 நிமிடங்கள் நீடிக்கும்.
மும்பையில் சந்திர கிரகணத்தை மாலை 06:04 மணிக்கு 14 சதவீத ஒளிபுகா நிலையில் காண முடியும். நிகழ்வு மாலை 06:01 மணிக்கு தொடங்கி 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி 25 நிமிடங்கள் நீடிக்கும்.
சண்டிகரில் கிரகணம் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் நீடிக்கும். மாலை 05:30 மணிக்கு அதன் அதிகபட்ச புள்ளியில் இது தெரியும்.
ஹைதராபாதில், மக்கள் சந்திர கிரகணத்தை அதிகபட்சமாக மாலை 05:43 மணிக்கு பார்க்கலாம். கால அளவு 1 மணி நேரம் 46 நிமிடங்கள் இருக்கும்.
ஸ்ரீநகரில் மறைந்த சந்திரன் மாலை 05:31 மணிக்கு 66 சதவீத ஒளிபுகாநிலையுடன் அடிவானத்திற்கு மேலே உயரும்.
பெங்களூரில் அதிகபட்சமாக மாலை 05:57 மணிக்கு 23 சதவீத ஒளிபுகா நிலையில் கிரகணம் நிகழும். இது மாலை 05:49 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி 36 நிமிடங்கள் நீடிக்கும்.

சென்னையில் எப்போது தெரியும்?
சென்னையில் மாலை 05:42 மணிக்கு கிரகணம் அதன் அதிகபட்ச புள்ளியை அடையும். மறைந்த சந்திரன் 1 மணி நேரம் 48 நிமிடங்கள் தெரியும். எனினும், மேகமூட்டம் உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா