ஹெல்த் ஸ்பெஷல்: டிரெண்டாகும் `வஜைனல் ஸ்டீமிங்’… நன்மையா? தீமையா?

Published On:

| By Selvam

சமீபகாலமாக, `வஜைனல் ஸ்டீமிங்’ (Vaginal Steaming) என்ற வார்த்தை டிரெண்ட் ஆகிவருகிறது. அதாவது, பெண்ணின் பிறப்புறுப்பில் நீராவி பிடிப்பது.

இது எப்படி செய்யப்படுகிறது, இதனால் ஏற்படும் நன்மை என்ன, இது எல்லோருக்கும் பரிந்துரைக்கத்தக்கதா உள்ளிட்டவற்றுக்கு விளக்கமளித்துள்ளார்கள் மகப்பேறு மருத்துவர்கள்…

“நீராவியைக் கொண்டு பெண்ணின் பிறப்புறுப்பைச் சுத்தம் செய்யும் வஜைனல் ஸ்டீமிங், புதிய விஷயம் கிடையாது. பழங்காலத்தில் இருந்தே செய்யப்பட்டுவரும் ஒரு முறைதான்.

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், முகத்துக்கு ஆவி பிடிப்பது போல, பிறப்புறுப்புக்கு ஆவி பிடிப்பது. பிறப்புறுப்பின் ஆரோக்கியத்துக்காக இது செய்யப்படுகிறது.

ஒரு பெரிய பாத்திரம் அல்லது தொட்டியில் (Tub) ஓரளவுக்கு சூடாக தண்ணீர் நிரப்பி, அதில் மூலிகைகள் சேர்த்து, அதன் மேல் பெண் நிற்கும்படியோ, அமரும்படியோ ஏற்பாடு செய்யப்படும்.

இதை வீட்டில் செய்துகொள்பவர்களும் உண்டு. ஸ்பாவிலும் இதை ஒரு சர்வீஸாக வழங்குகிறார்கள்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வலியைக் குறைக்கும், கருவுறுதலுக்கு உதவும், மன அழுத்தத்தைக் குறைக்கும் உள்ளிட்டவை வஜைனல் ஸ்டீமிங் தரும் நன்மைகள் எனக் கூறப்படுகிறது. ஆனால், இவற்றுக்கு எந்த மருத்துவ ரீதியான ஆதாரமும் இல்லை. இதைச் செய்வதால் ஏற்படும் ஒரே நன்மை… பிறப்புறுப்பு அமைந்திருக்கும் பெரினியல் தசைக்கு (Perineal muscles) ரத்த ஓட்டம் தூண்டப்படுவதைச் சொல்லலாம். இதைத் தாண்டி அறுதியிட்டுச் சொல்ல வேறு எந்த நன்மையும் இல்லை.

பெண்ணுறுப்புப் பகுதி மிகவும் மென்மையானது. வஜைனல் ஸ்டீமிங் செய்யும்போது தண்ணீர் அதிக சூடாக இருந்தால் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ஏற்கெனவே அந்தப் பகுதியில் தொற்று, எரிச்சல் போன்றவை இருந்தால், நீராவியால் அங்குள்ள சருமத்தில் பி.ஹெச் (PH Level) அளவு மாறி, தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். கர்ப்பிணிகள் கட்டாயமாக வஜைனல் ஸ்டீமிங் செய்யக் கூடாது.

பொதுவாக, பெண்ணுறுப்பு தன்னைத்தானே சுத்திகரித்து, பாதுகாத்துக்கொள்ளக் கூடியது. அங்கு இயற்கையாகவே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அவை, சருமத்தின் பி.ஹெச் அளவை சரியாக பார்த்துக்கொள்ளும். இந்தப் பகுதியில் அடிக்கடி சோப் போடுவது, வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது, நீராவி பிடிப்பது போன்றவை அங்குள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து பி.ஹெச் அளவில் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடும்.

எனவே, வஜைனல் பகுதியில் எதுவும் செய்யாமல் இருப்பதே சிறந்த பராமரிப்பு’’ என்று எச்சரிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் ஊறுகாய்

உக்ரைன் அதிபரை விட உக்கிரமா இருக்காரய்யா… அப்டேட் குமாரு

‘எங்க ரெண்டு பேருக்கும் தான் போட்டியே’… இந்த 2 மாவட்டங்களில் வெயில் அதிகம்!

அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share