ஹெல்த் டிப்ஸ்: பூச்சிகளை விரட்ட… இதைச் செய்யுங்கள்!

Published On:

| By Kavi

சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்த வகையில் பூச்சிகளை விரட்டி… ஹெல்த்தியாக வசிக்க இதைச் செய்யுங்கள்!

ஆகாயத்தாமரையை மூட்டைப்பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடும் தருவாயில் உண்டாகும் மணத்தால் பூச்சிகள் மயங்கிச் சாகும். இலுப்பைப் பிண்ணாக்கைப் புகைக்க, வீட்டில் உள்ள புழு, பூச்சி, எலிகள் அகலும்.

காட்டு இலுப்பைப் பிண்ணாக்கை நெருப்புத் தணலில் இட்டுப் புகைக்க பூச்சி, புழுக்கள் சாகும்.

குங்கிலியத்தைத் தணலில் போட்டுப் புகைக்க, நோயாளி இருக்கும் இடத்திலும், சாக்கடை முதலிய இடங்களிலும் உண்டாகும் நாற்றம் நீங்கும்.

சாம்பிராணியைப் புகையிட, கெட்ட நாற்றம் நீங்கும்.

முந்திரிக்கொட்டையின் மேலோட்டில் இருந்து எடுக்கப்படும் தைலத்தின் வாடை பட்டால், கரையான் முதலிய பூச்சிகள் சாகும்.

நொச்சி இலைகள் 4 அல்லது 5 வாசலில் கிடந்தால் கூட புழு, பூச்சிகள் உள்ளே வராது. அந்தக் காலத்தில் புழு, பூச்சிகள் வராமல் இருக்க, தானியங்களுடன் நொச்சி இலைகளை உடன் போட்டு வைக்கும் பழக்கம் இருந்தது.

வாரம் ஒருமுறை சாம்பிராணிப் புகையுடன், நொச்சி இலைகளையும் சேர்த்துப் புகை போடலாம். இந்தப் புகையைப் புத்தக அலமாரியிலும் காட்ட, புத்தகங்களுக்கு இடையில் சிறிய புழுக்கள் வராது.

படுக்கையறையில் ஒரு தட்டில் 4 அல்லது 5 நொச்சி இலைகளைப் போட்டு வைக்க, கொசு வராது. நொச்சி இலைகளைக் காய வைத்துத் தனியாகவோ அல்லது வேப்ப இலைகளோடு சேர்த்தோ புகை போட்டால் கொசு வராது.

ஆடாதொடை இலை, குப்பைமேனி இலை, நொச்சி இலை, நிலவேம்பு இலைகளைக் காய வைத்து, ஒன்று சேர்த்துப் புகைத்தாலும் கொசு வராது.

மாம்பூவை உலர்த்திப் பொடியைப் புகையிட கொசுக்கள் ஓடிவிடும். செலவே இல்லாத, இயற்கையான, உடலுக்கு பாதிப்பையோ, பக்க விளைவுகளையோ தராத மூலிகைக் கொசுவிரட்டிகள் இவை.

விஷக்காற்றால் நோய்கள் பரவும் காலத்தில், வசம்பை வாயிலிட்டு மெல்லுவது வழக்கம். குழந்தைகளுக்குப் பக்கத்தில் சிறு வசம்புத் துண்டைப் போட்டால், ஈ, எறும்பு, பூச்சிகள் பக்கத்தில் வராது. காற்றால் பரவக்கூடிய தொற்றுநோய்களும் குழந்தைகளை நெருங்காது. கால்நடைகளையும் நெருங்காது.

சாம்பிராணியுடன், வசம்புத்தூளைச் சேர்த்துப் புகை போடலாம். புத்தக அலமாரியில் வசம்புத் துண்டுகளைப் போட்டு வைக்க புத்தகப் புழுக்கள் வராது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!

சிறுத்தைய விட இதான் பயங்கரம் : அப்டேட் குமாரு

மோடி 3.0 அமைச்சரவை : யார் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!

மோடி 3.0 அமைச்சரவை : அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் சிண்டேவும் அதிருப்தி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel