ஹரியானா கலவரம்: சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றம்!

Published On:

| By Selvam

haryana clash hotels demolished

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் சட்டவிரோதமான கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தின் போது பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு மசூதி உள்பட பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இதனால் நூஹ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கலவரம் துவங்கிய பகுதியாக கருதப்படும் சஹாரா ஹோட்டலை அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “கலவரம் நடந்த நூஹ் பகுதியில் மருத்துவ கடைகள் உள்பட 12 கடைகள் அகற்றப்பட்டது. இடிக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் சமீபத்தில் மோதலில் ஈடுபட்ட சிலருக்கு சொந்தமானவை. நூஹ் மாவட்டத்தில் இதுவரை 50 முதல் 60 கடைகள் அகற்றப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட பலர் தங்களது கடைகளை மூடிவிட்டு கைது நடவடிக்கைக்கு பயந்து தப்பியுள்ளனர். நூஹ் பகுதியின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் அகற்றப்படாமல் இருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

செல்வம்

இம்ரான் கான் கைதை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் பிடிஐ போராட்டம்!

குப்பை மேட்டில் மருத்துவக் கழிவுகள்: டிரைவர்கள் தப்பியோட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel