கிச்சன் கீர்த்தனா: நாட்டு ஊத்தப்பம்

Published On:

| By Selvam

காலத்தின் மாற்றத்தைக் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் நம் பாரம்பர்ய சுவை மிகுந்த நாட்டுப் பண்டங்களை சுவைக்க மறந்து கொண்டிருக்கிறோம். ருசியும் ஆரோக்கியமும் ஒருசேர பெற்றிருப்பவை நம் பாரம்பர்ய சுவைமிக்க நாட்டுப் பண்டங்கள். அப்படிப்பட்டவைகளில் ஒன்று இந்த நாட்டு ஊத்தப்பம். இதைக் காலைநேர சிற்றுண்டியாக நாம் உண்ணும்போது அந்த நாள் முழுவதும் நல்ல புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உணரலாம். நம் உடலுக்கு வேண்டிய கார்போ-ஹைட்ரேட், வைட்டமின் சி போன்ற சத்துகள் இதில் நிறைந்துள்ளதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி – ஒன்றரை கப்
உளுந்து – முக்கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
துருவிய கேரட் – ஒன்று
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
இட்லிப்பொடி – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ஊத்தப்ப மாவு தயாரிக்க அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊறவைத்து அரைத்து உப்பு கலந்து புளிக்கவைத்து எடுக்கவும். பிறகு சூடான தோசைக்கல்லில் மாவைச் சிறிது கெட்டியான ஊத்தப்பமாக இட்டு அதன்மீது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அதன்மீது இட்லிப்பொடி சிறிது தூவி நல்லெண்ணெய்விட்டு மூடி போட்டு சிறு தீயில் வைத்து சுட்டெடுத்தால் அருமையான நாட்டு ஊத்தப்பம் தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?

கிச்சன் கீர்த்தனா: மோர் ஆப்பம்

இடப்பக்கம் சாய்ந்த இலங்கை… புரட்சி நாயகன் AKD… யார் இந்த அனுர குமார திசாநாயக்க?

இசிஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share