பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்தில் உங்களை அழகாக்கும் ஆடையும் அணிகலன்களும்!

Published On:

| By christopher

மழைக்காலம் என்றாலே மந்தமான நிலைதான். இந்த நாட்களில் வைப்ரன்ட் அல்லது பிரைட் நிறங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், புத்துணர்வான தோற்றத்தைப் பெறலாம்.

மழையில் நனைய நேர்ந்தால், லைட் கலர் அசௌகர்யமான தோற்றம் தரும் என்பதால் தவிர்த்து அடர்நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல சேறு, சகதியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும், லைட் அல்லது வெளிர் நிறங்களைத் தவிர்ப்பது நல்லது.

காற்று சுழற்சி அதிகமுள்ள காட்டன் மெட்டீரியலை நிச்சயம் உபயோகிக்கக் கூடாது. காற்று சுழற்சி அதிகமில்லாத, அதே சமயம் உடுத்துவதற்கு எளிமையாக இருக்கும் சிந்தடிக், சாட்டின், ஜீன்ஸ் போன்ற மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம்.

நம் தேவையைப் பொறுத்து மழைக்காலங்களில் சிம்பிள் மற்றும் ஹெவி ஜுவல்லரி இரண்டுமே உபயோகிக்கலாம். மழையில் நனைய நேர்ந்தால், குவிலிங் (Quilling) மற்றும் த்ரெடு (Thread) வேலைப்பாடுகள் நிறைந்த அக்சஸரீஸ் வீணாகும் வாய்ப்பு அதிகம். இதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தளவு லைட் மற்றும் டார்க் நிறங்களைத் தவிர்த்து பளிச் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்.

மழை நேரங்களில் ரப்பர் செருப்புகளை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நடக்கும்போது அது கால்களின் பின்னால் சேற்றை வாரியடிக்கும். நிச்சயம் லெதர் மற்றும் மென்மையான ‘லைட் வெயிட்’ காலணிகளையும் தவிர்க்க வேண்டும். செருப்புக்கு அடியில் ‘கிரிப்பர் (Gripper)’ இருக்கும் ஃபிளாட்ஸ் முதல் ஹீல்ஸ் வரை எந்தவிதமான செருப்பு வகைகளையும் பயன்படுத்தலாம். பக்குள்ஸ் வைத்த செருப்புகள் மழைக்காலங்களில் கைகொடுக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பாசிப்பயறு வெல்ல சுண்டல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி… மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ்வா? அமுதாவா? கோட்டை ரேஸ்!

பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்துக்கு உதவும் ஃபேஸ் பேக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel