கிச்சன் கீர்த்தனா: குடமிளகாய் – முந்திரி ரைஸ்!

Published On:

| By Kavi

கலந்த சாத வகைகளைத்தான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கும் பெற்றோர், சத்தான இந்த குடமிளகாய் – முந்திரி சாதம் செய்து கொடுக்கலாம். ஹெல்த்தியான இந்த ரைஸ் அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

குடமிளகாய் – ஒன்று

கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

வறுத்த முந்திரி – 10

ஒன்றிரண்டாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அரிசியை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து, நறுக்கிய குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய கலவை மற்றும் வறுத்த முந்திரி இரண்டையும் வடித்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி, லஞ்ச் பாக்ஸில் வைக்கவும். பிறகு, சிறிது வறுத்த முந்திரி மற்றும் ஒன்றிரண்டாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலையை மேலே தூவவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் சபரிமலை நடைதிறப்பு வரை!

பியூட்டி டிப்ஸ்: முடி இல்லாத பிரச்சினைக்கு என்னதான் முடிவு?

வச்சான் பாரு ஆங்கிள்– அப்டேட் குமாரு

தமிழிசை – அண்ணாமலை… ஒன்றாக போஸ் கொடுக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel