கோவையில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் ஆ.ராசா எம்.பி.
கோவை அவினாசி சாலையில் தெக்கலூர் அருகே இன்று (ஆகஸ்ட் 16) இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி சுய நினைவின்றி கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியே விமான நிலையம் செல்வதற்காக காரில் வந்த திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா தனது காரை நிறுத்தி விவரத்தைக் கேட்டறிந்தார்
“ஆம்புலன்ஸ் வந்தாச்சா, நம்ம காரிலேயே கொண்டு போய்டலாமா” என்று கேட்ட ஆ.ராசா பிறகு, ‘நம்ம காரிலேயே ஏத்துப்பா’ என்று இளைஞரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆம்புலன்ஸ் வந்தால் பாதியில் மாற்றிக்கொள்ளலாம், இப்போது தனது காரில் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மற்றொரு காரில் விமான நிலையம் சென்றார்.
உரிய நேரத்தில் உதவியதற்காக அங்கிருந்தவர்கள் ஆ.ராசாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
பிரியா